மஹா மந்த்ராலயம் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம், கோபி வட்டம்
ஏளூர் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சத்தியமங்கலம் அருகில்
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
மஹா மந்த்ராலயத்தில் அருள்மிகு சர்வ மங்கள செல்வ விநாயகர் கோவில் அமைத்து
தினமும் பூஜைகள் செய்து வருகிறோம்.
நந்தவனம்:-
மஹா மந்த்ராலயத்தில் உள்ள நந்தவனத்தில் அனைத்து கடவுள்களுக்கும் தேவையான பூஞ்செடிகள்
பழமரங்கள், பல வகையான மரங்கள் மூலிகை செடி, கொடிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கு
உரிய நட்சத்திர மரங்கள், நவகிரக மரங்கள் நடப்பட்டு பூஜை செய்து வருகிறோம்.
திருமணத் தடை, புத்திரபாக்கியம் மற்றும் அனைத்து தோஷங்களுக்கும் உரிய பரிகார மரங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தோஷ நிவர்த்திகள் செய்யப்படுகிறது.
நந்தவனதில் உள்ள புற்றுக்கண்ணிற்கு பரிகார பூஜைகள் செய்து தோஷ நிவர்த்திகள் செய்யப்படுகிறது.
பறவைகள்:-
மஹா மந்த்ராலயத்தில் வான் கோழிகள், ஜின் கோழிகள், நாட்டு கோழிகள், வாத்துகள், கூஸ் வாத்துகள், புறாக்கள், காதல் பறவைகள் மற்றும் பல வகையான வண்ண மீன்கள் வளர்த்து வருகிறோம்.
|